Friday, February 16, 2018

சிறப்பு விருந்தினர் பகிர்வு 36 - திருமதி முன்சிலா அனஸ் / சிக்கன் ஃப்ராங்கி / Guest post -36 / Mrs.Munsila Anas / Chicken Frankie

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி.முன்சிலா அனஸ் ,மகிழ்ச்சியான இல்லத்தரசி, கணினி அறிவியல் பட்டதாரி, அவர் நம்முடன் பகிரப்போகும் குறிப்பு சிக்கன் ஃப்ராங்கி.


அவர் தன்னுடைய சுய அறிமுகமாகக் குறிப்பிடுவது.
நான்  (முன்சிலா பாத்திமா) மகிழ்ச்சியான இல்லத்தரசி. சொந்த ஊர் திருநெல்வேலி மேலப்பாளையம், தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். எனக்கு  நஹ்தியா (5) என்ற பெண் குழந்தையும் , ஜுல்பிகார் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள். சமையல் எல்லாம் செய்வதோடு சரி. சாப்பிடுவது எல்லாம் சிறிது தான். என் சமையல் ஆர்வத்திற்கு காரணம் என் கணவர் தான். என் சமையலை அவ்வப்போது சுவைத்து பார்த்து Review &Comments சொல்லுவது என் மச்சான் தமீம் அன்சாரி மற்றும் அவர் மனைவி அஸ்மத் தான்!
அவர் ஆரம்பித்துள்ள புதிய ஆங்கில வலைப்பூ லின்க் இதோ !
முன்சிலா தன்னுடைய குடும்ப புகைப்படத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார்.அனைவர் சார்பாகவும் அன்பான  நல்வாழ்த்துக்கள் மா.
அருமையான குறிப்பை அனுப்பி தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிமா.
சிக்கன் ப்ராங்கி
தேவையான பொருட்கள்:
சிக்கன் (எலும்பு இல்லாதது) - 3௦௦ கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு 
எண்ணை - சிறிதளவு
பட்டை/கிராம்பு தூள் - சிறிதளவு
கோஸ் - 1௦௦ கிராம்
காரட் பெரியது - 2 
வெங்காயம் - 1௦௦ கிராம்
மைதா மாவு - 3 கப்
முட்டை - 3
தந்தூரி மயோன்னிஸ் - தேவைக்கு

செய்முறை : 
மைதா மாவுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து Soft ஆக குழைத்து கொள்ளுங்கள். 
இறுதியில் எண்ணை சேர்த்து மறுபடியும் பிணைந்து கொள்ளுங்கள். லேசான துணியை கொண்டு மூடி ஒரு அரை மணி நேரம் வைக்க வேண்டும். 
ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பட்டை/கிராம்பு தூள் சேர்த்து, மணம் வந்தவுடன், சிக்கனை சேர்க்கவும்


அதனுடன் மிளகாய் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து, வேக விடுங்கள். 


நன்றாக வெந்த பிறகு சிறிதாக உதிர்த்து கொள்ளுங்கள்.   
                  

கோஸ் மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கி சிறிது எண்ணை விட்டு வதக்கி கொள்ளுங்கள். காரட்டை நீளமாக துருவி கொள்ளுங்கள். 


இந்த மூன்றையும் சிக்கனில் போட்டு, மயோன்னிஸ் சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ளுங்கள் மைதாவை மெல்லிதாக பரத்தி கொள்ளுங்கள். 
மூன்று முட்டையுடன் உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளுங்கள்.

தோசை கடாயில் பரத்திய மிதவை ஒரு பக்கம் முட்டை தடவி சுட்டு எடுத்து கொள்ளுங்கள். 


முட்டை தடவிய பக்கத்தில் சிக்கன் கலவையை Stuff செய்து சுருட்டி கொள்ளுங்கள். சுவையான ப்ராங்கி தயார்!! 
நீங்களும் செய்து பாருங்க. பார்த்தவுடன் எடுத்துச் சாப்பிட தோன்றுகிறது.


சூப்பர் குறிப்பு. பகிர்வுக்கு மனமார்ந்த மகிழ்ச்சி. நன்றி.
மீண்டும் அடுத்த சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம். 

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Wednesday, February 14, 2018

வாழைப்பழ கப் கேக் / பனானா மஃபின் / Banana muffin ( Air fried)

இன்றோடு என்னுடைய இந்த சமைத்து அசத்தலாம் வலைப்பூ ஆரம்பித்து 8 வருடங்கள் பூர்த்தியாகிறது.  வீட்டில் செய்யும் என் அன்றாட சமையலை பொழுது போக்காய் இங்கே பகிர்ந்து வந்தேன்.
இன்று வரை என்னுடன் பயணிக்கும், வருகை புரியும் அனைத்து அன்பான நட்புகளுக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சிகலந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

பனானா மஃபின் செய்முறை :-
தேவையான பொருட்கள்;-
கோதுமை மாவு - அரை கப்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பட்டைத்தூள் - 1/4 தேக்கரண்டி
வாழைப்பழம் - 1
வெனிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 1
சீனி - கால் கப்
எண்ணெய் - கால் கப்
பால் - 2 மேஜைக்கரண்டி
மேலே தூவ பொடித்த சீனி, பட்டைத்தூள் சிறிது.
பரிமாற தேன் - தேவைக்கு.

செய்முறை:-
முதலில் ஒரு பவுலில் முட்டை,சீனி,எண்ணெய் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
அடுத்து அத்துடன் வெனிலா எசன்ஸ் , பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து அடிக்கவும்.
அதனுடன் கோதுமை மாவு,பேக்கிங் பவுடர், பட்டைத்தூள் சேர்க்கவும்.
கல்ந்து பார்க்கவும். திக்காக இருந்தால் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஏர் ஃப்ரையரை 200 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
மஃபின் கப்பில் முக்கால் அளவு மாவை எடுத்து வைக்கவும்.5 மஃபின் அளவு வரும்.
அதனை ட்ரேயில் அடுக்கி ஏர் ஃப்ரையரில் வைக்கவும். வெப்ப நிலையை 180 டிகிரி 10 நிமிடம் செட் செய்யவும்.
10 நிமிடம் ஆனதும் திறந்து வெந்து விட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
விரும்பினால் மேலே பொடித்த சீனி,பட்டைத்தூள் சிறிது தூவவும்.
அரை மணி நேரம் கழித்து கப்பில் இருந்து ஆறிய பின்பு எடுக்கவும்.
தேனுடன் பரிமாறவும்.
சுவையான வாழைப்பழ கப் கேக் தயார்.
என்னுடைய செய்முறை வீடியோ பெட்டர் பட்டரில் இதோ !
 அதனை இங்கே உங்கள் அனைவருக்காகவும் பகிர்கிறேன்.

இதே போல் நீங்கள் ஓவனிலும் செய்யலாம்.செய்து பாருங்க. ரொம்ப ஈசி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Saturday, February 3, 2018

பேரீச்சம்பழ கேக் முட்டை சேர்த்தும் சேர்க்காமலும்/ Dates cake with egg & eggless


பேரீச்சம் பழ கேக் முட்டை சேர்க்காமல்
தேவையான பொருட்கள் ;-
மைதா அல்லது கோதுமை மாவு - 1 கப்
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
பேரீச்சை கொட்டை நீக்கி பொடியாக அரிந்தது - 1 கப்
பால் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
சீனி - அரை கப் ( இனிப்பு அதைகம் தேவை என்றால் சிறிது கூட்டிக் கொள்ளலாம்)
விரும்பினால் வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி.
செய்முறை :-
முதலில் பால், சீனி பொடித்தது, பேரீச்சை சேர்த்து கலக்கவும்.
சீனி நன்கு கரைந்து பேரீச்சையும் மசிய வேண்டும்.
எண்ணெய் சேர்த்து நுரைக்க அடிக்கவும்.
மாவுடன் பேக்கிங் சோடா கலந்து அரித்து வைக்கவும்.
அந்த மாவை மெதுவாக பேரீச்சம் பழக்கலவையில் போட்டு மெதுவாக பிரட்டினாற் போல் கலக்கவும்.

இப்பொழுது பேக்கிங் செய்ய மாவு தயார்.
ஒரு பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் ஷீட் விரித்து சிறிது எண்ணெய் தடவவும். அல்லது சிறிது வெறும் ட்ரேயில் எண்ணெய் மைதா கலந்து தடவவும். கேக் ஒட்டாமல் வரும்.
ஓவனை 180 டிகிரிக்கு 10 நிமிடம்  முற் சூடு செய்யவும்.

30-40 நிமிடம் பேக் செய்து எடுத்தால் பேரீச்சம் பழம் கேக் முட்டை சேர்க்காமல் தயார்.ஆற விட்டு துண்டு போட்டு எடுத்து வைக்கவும். தேவைக்கு எடுத்து பரிமாறவும்.

சுவையான பேரீச்சம் பழ கேக் முட்டை சேர்க்காமல் செய்து அசத்தியது. வருடக்கணக்கில் இந்த ரெசிப்பி பைலில் இருந்து இன்று தான் நேரம் வாய்த்தது.

பேரீச்சம் பழ கேக் முட்டை சேர்த்து :-
தேவையான பொருட்கள்;-
மைதா மாவு - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
முட்டை - 1
மிகப் பொடியாக  நறுக்கிய பேரீச்சை - ஒரு கப்
பொடித்த சீனி - அரை கப்
எண்ணெய் - அரை கப்
பால் - அரை கப்
விரும்பினால் வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி.


தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
பால்,சீனி,பேரீச்சை சேர்த்து அடிக்கவும்.

முட்டை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
 
எண்ணெய் சேர்த்து அடிக்கவும்.

மாவு பேக்கிங் பவுடர் சேர்த்து அரித்து வைக்கவும்.

மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிரட்டினாற் போல் விரவவும்.

பேக்கிங் ட்ரே தயார் செய்யவும்.
மாவுக்கலவையை ஒரு போல் விடவும்.
ஓவனை முற்சூடு செய்து 180 டிகிரிக்கு 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
சுவையான பேரீச்சம் பழம் கேக் முட்டை சேர்த்தும் செய்து பார்த்தது. சுவை சூப்பர்.

 எடுத்துக் கோங்க, நான் ஒரு முட்டை தான் சேர்த்தேன். நீங்கள் விரும்பினால் 2 முட்டை சேர்க்கலாம்.


ஆற விட்டு கட் செய்து பரிமாறவும்.