Tuesday, January 15, 2013

மட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu


தேவையான பொருட்கள்;
மட்டன் - அரைக்கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரைடீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள்  - ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
நறுக்கிய மல்லிக்கீரை - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய புதினா - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3- 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அரைக்க:
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 4-6
பெருஞ்சீரகம்(சோம்பு) - 1 டீஸ்பூன்
நைசாக அரைத்து எடுத்து தனியாக வைக்கவும்.

 முதலில் கறியை கொழுப்பு,சவ்வு நீக்கி நன்கு 3-5 தண்ணீர் வைத்து அலசி தண்ணீர் வடிகட்டவும்.பின்பு அத்துடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ,மஞ்சள் தூள்,தயிர்,தேவைக்கு சிறிது உப்பு  சேர்த்து விரவி வைக்கவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,வெங்காய்ம் சிவந்து விடக்கூடாது.மீதியுள்ள  இஞ்சி பூண்டுபேஸ்ட்,கரம்மசாலா சேர்க்கவும்,சிம்மில் வைத்து அடி பிடிக்காமல் வதக்கவும்.அத்துடன் மல்லி புதினா சேர்க்கவும்.நறுக்கிய தக்காளி,முழுதாக பச்சை மிளகாய் சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.வதக்கிய பின்பு கறியை சேர்த்து நன்கு பிரட்டவும்.அத்துடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்.சீரகத்தூள் சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி விடவும்.
இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.மூடி அடுப்பை மீடியமாக வைத்து குக்கரில் ஐந்து விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.

 பத்து நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும். கறி வெந்து இப்படி காணப்படும்.

 அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் 1-2 கப் சேர்க்கவும்.
கொதி வரட்டும், தேங்காய் வாடை மடங்கட்டும்.
மூடி போட்டு  அடுப்பை சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேலெழும்பி வரும். இப்பொழுது கறிக் குழம்பு ரெடி.
 ரெடியான மட்டன் குழம்பை வெறும் சோறு,நெய்ச் சோறு,சப்பாத்தி,பரோட்டா,ஆப்பம்,தோசை,இட்லி  இவற்றுடன் சேர்த்து விருப்பம் போல பரிமாறலாம்.
தேங்காய் சேர்க்க விருப்பமில்லதவர்கள் அப்படியே தேங்காய் விடும் முன்பு கறியில் ஊறியிருக்கும் தண்ணீரை சுண்ட வைத்து இப்படி கூட்டுடனும் பரிமாறலாம்.கூட்டு திக்காக ஒரு அரை டீஸ்பூன் அரிசிமாவு அல்லது கார்ன்ஃப்லோர் சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்.
காஷ்மீரி சில்லி பவுடர் உபயோகித்தால் காரம் குறைவாகவும், கலர் அருமையாகவும் இருக்கும்.காரம் மட்டும் அவரவர் விருப்பம்.

கறிமசாலா உபயோகிப்பவர்கள் மிளகாய்த்தூளுடன், தனித்தனியாக மசாலா தூள்  சேர்க்காமல் ஒரு டேபிள்ஸ்பூன் கறிமசாலா சேர்த்தும் குழம்பு வைக்கலாம்.

நான் ஏலம்,பட்டை,கிராம்பை எப்பொழுதும் முழுதாக உபயோகிப்பதில்லை,தூள் செய்து தான் போடுவேன்.விரும்புபவர்கள் முழுதாகவும் உபயோகிக்கலாம்.

முந்திரி பருப்பு சேர்ப்பது குழம்பின் கெட்டித்தன்மைக்கும் ருசிக்கும் தான்.முந்திரிப்பருப்பு சேர்க்க விருப்பமில்லதவர்கள் 1 டீஸ்பூன் அரிசிமாவை தேங்காயுடன் கரைத்தும் விடலாம்.எங்க ஊரில் இதனை கூட்டு சேர்ப்பதுன்னு சொல்லுவாங்க.

இந்த முறையில் செய்தால் மட்டன் குழம்பு அருமையாக இருக்கும்.


18 comments:

ஸாதிகா said...

மட்டன் குழம்பு ருசிக்க ருசிக்க சமைத்து காட்டிட்டீங்க தோழி.

Asiya Omar said...

உடன் கருத்திற்கு மிக்க நன்றி தோழி,இந்த குறிப்பு ரொம்ப நாளாக படங்கலுடன் ஃபைலில் இருந்தது,இப்பத்தான் பகிர நேரம் வந்திருக்கு.வருகைக்கு மகிழ்ச்சி.

ராதா ராணி said...

மட்டன் குழம்பு பார்த்த உடன் சாப்பிட தூண்டுது ஆசியா..ரொம்ப அருமையா போட்டோலேயே அதன் மணத்தை உணர முடியுது.

Meena Selvakumaran said...

I like all your recipes especially non-veg.So tempting mutton kuzhambu.

Savitha Ganesan said...

super akka.paakkave romba azhaga irukku.

Priya said...

Mouthwatering mutton kuzhambu..Pasikuthu paathathume.

Asiya Omar said...

ராதா கருத்திற்கு மிக்க நன்றி.

மிக்க நன்றி மீனா.

மிக்க நன்றி சவிதா.

மிக்க நன்றி ப்ரியா.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

muzmmilalm.259@gmail.com said...

அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா... அருமையான வலை பதிவுகள் ... இன்று தான் எனக்கு உங்கள் வலை பதிவை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது ... அனைத்து சமையல்களும் சூப்பர் .. என்னை போல வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு மிகவும் பிரயோசனம் ஆனது ... இனி நான் அம்மா சமையலை சாப்பிட முடியாது என்று கவலை பட மாட்டேன் ... அம்மா சமையல் எல்லாமே எப்படி செய்வது என்று நீங்கள் சொல்லி தந்து இருக்கின்றீர்கள் .. இன்றிலிருந்து நான் ஒவ்வென்றாக செய்து சாப்பிட போகிறேன் .... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .... இறைவன் உங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யட்டும் .....

Asiya Omar said...

muzmmilalm.259@gmail.com வருகைக்கு நன்றி.கருத்திற்கும் துவாவிற்கும் மகிழ்ச்சி.ஆமீன்....

sridevi sathya said...

மட்டன் குழம்பு ருசிக்க சமைத்து காட்டிட்டீங்க தோழி.

Snow White said...

ஆகா அருமையா இருக்கே ...

nafeesa said...

Assalamu alaikum sister...Iam a big fan of ur blog..also following more recipes..i tried many recipe from ur blog..All came out very well..Tnx, keep posting as much as many recipes in future...In sha'Allah..Sure it is really helpful to the Starters as like Me..looks tempting mutton kuzhambu..could u plz post chicken kuzhambu..

Somasundaram Hariharan said...

அக்கா உங்களுடைய வலைத்தளம் மிகவும் பயனாகயிருக்கிறது, நானும் என் மனைவியும் எப்போதும் அசைவ உணவை சமைப்பதர்கு உங்கள்: குறிப்புகளையே பயன்படுய்த்துகிறோம். மிக சுவையாக உள்ளது .. நன்றிகளோடு\

ஹரிகரன்
கத்தார்

anbu saravanan said...

Nice Blog. IF you want your blog will look like my http://bestsamayalsecret.blogspot.com.
contact me . I am a blog designer and also doing google adsense.

velu said...

அருமை

Ravi Theja said...

மிகு்ன்றி தோழி. முதல் மிுறையாக பழகுகறி குழம்பு பழகுகிறேன். நன்றி படத்துடன் செய்முறூைக்குமுறைக்கு

Kavitha Jegan said...

மிகவும் எளிய அருமையான குறிப்பு ஆசியா மாமி..மிக்க நன்றி..

Kavitha Jegan said...

மிக எளிய அருமையான குறிப்பு..மிக்க நன்றி தோழி ஆசியா அவர்களே..